வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் – அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை  முழுமையாக  பாதுகாப்போம்.மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை . சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம்  என பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர்  சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வட மாகாண மக்கள் இதுவரை காலமும் பிறப்பு,திருமணம்,இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பில் உள்ள பிரதான ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்த அசௌகரியத்திற்கு  தீர்வு காணும் வகையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சொந்தமான வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகம்  நேற்று வியாழக்கிழமை  (30) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

பொது நிர்வாக,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆகியோரின் தலைமையில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள ஏ9 வீதி, மன்னக்குளத்தில் இந்நிகழ்வு நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரதான நிர்வாக மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பான முதன்மை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்  சந்தன அபேரத்ன, இதுவரை காலமும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பு மாளிகாவத்தை ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், மக்களுக்குப் பல நாட்கள் விரயமானதுடன், போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்காகப் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியிருந்தது.

இந்நி்லையில், இந்த புதிய பிராந்திய ஆவணக் காப்பகம் நிறுவப்பட்டதன் மூலம் மக்களின் நேரமும் பணமும் சேமிக்கப்படுவதோடு, அப்பகுதியின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் விவசாயத்திற்கும் ஏற்பட்ட தடைகள் முற்றாக நீக்கப்படும்.மேலும், இந்த அலுவலகத்தை மையமாகக் கொண்டு மன்னக்குளம் பகுதியில் ஒரு சிறிய நகரம் உருவாக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்குப் புதிய வணிக மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் பல உருவாகும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய யுத்தத்திற்கு நிர்வாக அதிகாரங்களும் சேவைகளும் பரவலாக்கப்படாமையும் ஒரு காரணியாக அமைந்தது.இத்தகைய நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களைக் குறைத்திருக்க முடியும்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்,யுத்தத்தினால் இழக்கப்பட்ட காணி உரிமைகளை மீள வழங்கி தீர்த்து வைக்கும் விசேட திட்டமும், சேதமடைந்த வீடுகளுக்காகப் புதிதாக 13,000 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளன.

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கால்நடைகளைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையின் மூலம் உரிமையை உறுதிப்படுத்தி, அரசாங்கக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.கடந்த தேர்தல்களில் வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை நூற்றுக்கு நூறு சதவீதம் பாதுகாத்து, மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம்.

மேலும், இந்த ஆவணக் காப்பகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பணிகளுக்காக அரசாங்க நிதியுதவி மற்றும் கணினிகள் உள்ளிட்ட பௌதிக வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளையில், ஒட்டுமொத்த அரச சேவையிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆண்டில் நிர்வாக சேவைக்கு 2000 க்கும் மேற்பட்டோரையும் 30,000 ஆசிரியர்களையும் ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பதிவாளர் நாயகம் எஸ். ஜனதீபன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், வவுனியா மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் கலந்துக்  கொண்டனர்.

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.