சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் (Sherwood Park) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, 59 வயதான காரல் முசியால் (Carl Musial) என்பவர் ஜூலை 22 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் குறுக்கீடு (Sexual interference), பாலியல் தீண்டலுக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் இளம் நபரை பாலியல் ரீதியாகச் சுரண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்கள் 2015 பிப்ரவரி முதல் 2026 பிப்ரவரி வரை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முசியால், ஆகஸ்ட் மாதம் ஷெர்வுட் பார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.