7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (23) மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொடை மற்றும் வத்தளை பகுதிகளில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘குடு ரொஷான்’ என்பவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வந்த வேளையில் அவர் புகைப்பிடிப்பதற்காக வெளியில் சென்றிருந்தார்.

இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ‘குடு ரொஷான்’ அணிந்திருந்த உடைக்கு நிகரான ஆடையை அணிந்திருந்த மற்றொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அவர்கள் இருவரையும் அடையாளம் காண முடியாததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை, வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த ‘வனாத்தே சுமேதா’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரரின் மூன்று வயது மகளின் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் அவர் ‘குடு ரொஷான்’ என்பவருடன் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரி, விழாவிற்கு வந்தவர் போல் நடனமாடிக்கொண்டே சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி வந்த மோட்டார் வாகனம் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவே (23) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ‘மட்டக்குளி மனோஜ்’ என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிசூடு நடத்தியவர்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க மற்றும் களனி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் வழிகாட்டலில் 5 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை, தெமட்டகொடை, குப்பியாவத்தை பகுதியில் நேற்று மாலை 6.35 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அங்கு அவர்கள் இலக்கு வைத்த நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஓடும்போதும், அவரைத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபர் பொரளை, வனாத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த தினோத் வருண பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழாங்கியவர் இவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், தற்போது பொலிஸ் காவலில் உள்ள ‘வனாத்தே துமிந்த’ என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா ஆவார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘வனாத்தே சது’ என்ற குற்றவாளியின் தரப்பினால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தேவேந்திரமுனை தேவாலயத்தின் பெரஹரா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.

அதன் பாதுகாப்பிற்காக 600 பொலிஸ் அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்