சென்னை:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, மதுரை, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லம், மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகங்களில் விடிய விடியத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விதிகளை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்கள் அறவழியில் போராடினால் அரசு எப்போதும் ஆதரிக்கும் எனவும், நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதுதான் தவெக மற்றும் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையில் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தார்.
#NEETProtest #TamilNaduStudents #DelhiPoliceAction #SFI #EducationMinisterRajmohan #TVKStance #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #StatePolitics #StudentProtests #NationalIssue #PublicSafety #Governance #CurrentAffairs #PoliticalControversy #TamilNaduNews #PolicyDebate #MedicalEntranceExams