முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும்வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பில் எதிர்காலத்தில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றில் 22.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.
ஆனால் தற்போதும் சுற்றுலாத்துறையில் முல்லைத்தீவு மாவட்டம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் சில விடயங்களுக்கு 2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டைச் செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதை அறியமுடிகின்றது.
கட்டட நிர்மானங்களுக்கு தற்போது அரசு மெல்ல மெல்ல அக்கறையைக் காட்டினாலும், சுற்றுலா வழிகாட்டலைச் சிறந்த முறையில் செயற்படுத்த தேவையான ஆளணி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு என்பன முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே காணப்படுகின்றது.
சுற்றுலா தொடர்பான அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும், போதியளவு வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கும் மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் முக்கியதேவையாகும்.
அதேபோல் சுற்றுலாத்துறைக்கான அளணியும் தேவைப்படுகின்றது.
எனவே நிர்மாணங்களுக்கு மேலதிகமாக வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும்வகையில், மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்டத்திற்குவழங்கும் ஏதுநிலை தங்கள் அமைச்சின்கீழ் காணப்படுகின்றதா? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதன்போது சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க பதிலளிக்கையில்,
வடக்குமாகாணம் சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான இடமாகக் காணப்படுகின்றது. உலகவங்கியின் நிதி உதவியில் நாம் ஒரு திட்டத்தினை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.
சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவு பகுதிகளில் ஆரம்பக்கட்டத்திலிருக்கின்றது.
இந்தப் பகுதிகளில் தங்குமிட வசதிகள் மிகவும் தரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன.
இங்கு சுற்றுலாத்துறைக்குரிய போதியளவு வசதி வாய்புக்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அனைத்து வசதிவாய்ப்புக்கும் செய்துகொடுக்கப்படவேண்டும்.
ஆகவே இவ்வாறான விடயங்களில் நாம் அபிவிருத்திகளைச் செய்யவேண்டியிருக்கின்றது.
எம்மால் சுற்றுலா வலயங்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களை அபிவிருத்திசெய்யத் திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் சுற்றுலா அதிகாரசபையினூடாக அந்த அபிவருத்திகளைச் செய்யவிருக்கின்றோம்.
எதிர்காலத்தில் மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கான ஆளணித் தொகுதியினர் இதற்குப் பொறுப்பாக நியபிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றா
batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.