சென்னை:
தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிணையில்லா கல்விக் கடன்களை எளிதாகப் பெறுவதை உறுதி செய்ய, உயர்கல்வித் துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவிப் பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவார்கள்.
கல்விக் கடன் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் இதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யப்படவுள்ளது. பொருளாதாரக் காரணங்களால் எந்த மாணவரும் கல்வியைப் பாதியில் நிறுத்தக் கூடாது என்பதே இந்த அரசின் முதன்மை நோக்கம் என அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
#EducationLoan #HigherEducation #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #StudentWelfare #Politics2026 #EducationalSupport #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PositiveGovernance #AssemblyDebate #Opposition #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash