நாட்டில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வீழ்ந்துவிட்டது!

நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விசனம் வெளியிட்டுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயம் நேற்று (12) வெலிக்கடை பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசியல் பயணமானது மிகவும் நம்பிக்கைக்குரியதொன்றாகும். சர்வஜன அதிகாரம் எனும் கட்சியினை நாம் ஆரம்பித்ததே ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒரு பெரும் நம்பிக்கையுடன் இந்நாட்டில் ஏற்பட்டிருந்த உண்மையான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே ஆகும். இந்த வெற்றிடத்தின் ஊடாக இந்நாட்டுக்கு அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், அவ்வாறு கட்டியெழுப்புவதன் மூலம் எமது அன்பிற்குரிய இலங்கை மக்களுக்கு ஒரு சரியான திசையினைக் காட்டுவதற்கும், அதன் வழியே இந்நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

இன்று இலங்கையின் பொருளாதாரம் மாத்திரமல்ல வீழ்ச்சியடைந்துள்ளது; இந்நாட்டின் சமூகமும் கலாசாரமும், வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இன்று நீதித்துறையின் சுயாதீனத்தன்மையும் பலவீனமடைந்து, சீர்குலைந்து போயிருக்கின்றது. இக்கட்டமைப்புக்குள் பணியாற்றுகின்ற சட்டத்தரணிகளும் இந்நாட்டை நேசிக்கின்ற மேன்மையான நீதிபதிகளும் கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானதாகும்.

இந்த நீதித்துறை கட்டமைப்பு குறித்தும், எமது சட்ட ஒழுங்கு குறித்தும், பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் மக்கள் மத்தியில் நிலவுகின்ற நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம் தற்போது எதிர்கொண்டிருக்கின்றோம். எனவே, இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அனைவரும் இந்நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு ஒன்றாக ஒன்றிணைய வேண்டும் என்றார்.

sajith 5

பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை – இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் – சஜித்

October 13, 2026

இலங்கையின் அரசமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் கவலையளிக்கின்றன என எதிர்கட்சி தலைவர் சஜித்

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்