இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் திட்டம் இன்று ஆரம்பம்

67,000 குடும்பங்களின் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும், இலங்கையின் இரண்டாவது பாரிய நீர் திட்டம் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்படுகிறதுஎன்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரத்தில் எங்களுக்கு நீர் என்பது உயிர். இது குளங்கள் நிறைந்த இராஜ்யம். ஆயினும், குடிப்பதற்கு சிறிதளவு நீரைக் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது நாம் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். இப்பிரதேசத்தில் வீதியின் இருமருங்கிலும் அதிகமாக இருப்பது நீர் விற்பனை செய்யும் கடைகளாகும். அவ்வாறு நடப்பதற்குக் காரணம், குடிப்பதற்கிருக்கும் நீர் ஊற்றுகளின் மீது நம்பிக்கை இல்லாததேயாகும். குழாய் மூலமான நீரைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னும் பெருமளவிலான மக்கள் காத்திருக்கிறார்கள்.

இப்போது நிர்மாணிக்கப்பட்டு வருவது பன்னிரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிய சுத்திகரிப்பு நிலையத்துடனான ஒரு திட்டமாகும். இதன் விநியோகக் குழாய்கள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவடைகின்றன. 67,000 நீர் இணைப்புகளை வழங்கும், 51 பில்லியன் செலவில் அமைக்கப்படும் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் வழங்கல் திட்டம் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இப்பிரதேச மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக மக்கள்நேய அரசாங்கம் என்ற வகையில் இது போன்ற பல பாரிய திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதுமட்டுமன்றி, அநுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம, கிரிபாவ திட்டம், எப்பாவல, கல்நேவ, பயாகல போன்ற பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டு மக்கள் ஒரு மக்கள்நேய அரசாங்கத்தை உருவாக்கி எதிர்பார்த்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் என்றார்.

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு