தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலும் பாதுகாப்பு என்பது ஒரு பொய்க்கனவாகவே இருந்திருக்கிறது.
பாதுகாக்க வேண்டிய சிறை அதிகாரிகளின் கைகளிலேயே கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
2021 ஆம் ஆண்டு கோத்தபாயா ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது காலம் சென்ற அமைச்சர் லொஹான் ரத்வத்தே , அனுராதபுரத சிறைசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து, தமிழ் அரசியல் கைதிகளைத் து*ப்பாக்கி முனையில் பிடித்து வைத்து, அவர்களைக் கொ*ன்றுவிடுவதாக மிரட்டியிருந்தார் .
2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தின் போது வவுனியா சிறைச்சாலையில் நடைபெற்ற மிக கொ*டூர தாக்குதலில் சித்திரவதைக்குள்ளான திரு கணேசன் நிமலரூபன் அங்கேயே உ*யிரிழந்தார்.
அவருடன் தாக்கப்பட்ட திரு மாரியதாஸ் நவிஸ் தில்ருக்சன் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமா நிலையில் போராடி, இறுதியில் 2012 ஆகஸ்ட் 8 யன்று உ*யிரை விட்டார்.
2000 ஆம் ஆண்டு திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அதிகாரத்திலிருந்த போது பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமிற்குள் , அத்துமீறி உள்நுழைந்த சிங்களக் கிராம மக்கள் க*த்திகள், வா*ள், பொ*ல்லுகள் கொண்டு அங்கு உறகத்திலிருந்த 27 அரசியல் கைதிகளை வெட்டிக் கொ*ன்றனர்.
ஒரு சிலர் உயிருடன் எ*ரிக்கப்பட்டனர்.
1997 ஆம் ஆண்டு திருமதி சந்திரிகா குமாரதுங்கா ஆட்சி காலத்தின் போது களுத்துறை சிறைச்சாலையில் மீண்டும் அதே கதை – சிறைக்குள் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டனர்.
மூவர் உ*யிரிழந்தனர்.
1983 கருப்பு ஜூலை இனப்படுகொலை காலத்தில், வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொ*லை செய்யப்பட்டனர்.
தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட பலர் மனிதாபிமானமற்ற முறையில் மிக கோரமாக வீழ்த்தப்பட்டனர்.
அனுராதபுரம், வவுனியா, வெலிக்கடை, பிந்துனுவெவ, களுத்துறை – ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு பொதுவான கேள்வி மட்டும் தொடர்ந்து ஒலித்தது.
பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் கண்முன்னே இவை எப்படி நடந்தது?
ஏன் நீதி வழங்கப்படவில்லை ?
குற்றவாளிகள் ஏன் தண்டிக்கப்படவில்லை ?
இதன் விளைவு இன்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் சில மணிநேரங்களுக்குள் சுமார் 26 சிங்கள சிறை கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கொ*ல்லப்பட்டுள்ளனர்.
இது புதியதொரு வன்முறை அல்ல
இது பழைய கதையின் இன்னொரு அத்தியாயம்.
சிறைச்சாலை மீண்டும் இரத்தக் களரியாக மாறியிருக்கின்றது
2012 ஆம் ஆண்டு, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, வெலிக்கடை சிறைச்சாலையில் 27 சிங்கள கைதிகள் கொ*ல்லப்பட்டனர்.
அப்போது, அதற்கு “போதைப்பொருள் தொடர்பான மோதல்” என்ற மஹிந்த ராஜபக்சே குடும்பம் விளக்கம் சொன்னது
அந்த நேரத்தில் எதிர்க்கட்சியில் இருந்த ஜே.வி.பி., வெலிக்கடை சிறைப் படுகொ*லையை அரச படுகொ*லை என வர்ணித்தததுடன் “சட்டமும் ஒழுங்கும் முற்றாக சீர்குலைந்துவிட்டது” என வசை பாடியது
இப்போது ஜே.வி.பி. ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
மஹிந்த ராஜபக்ச தரப்பு எதிர்க்கட்சியில் உள்ளது.
ஆனால் கதை மட்டும் மாறவில்லை.
மீண்டும் “போதைப்பொருள்” என்ற அதே விளக்கம்.
மீண்டும் அதே அரசியல். நியாயப்படுத்தல்கள்
எண்ணிக்கையில் சிறிய தேசிய இன மக்களின் உயிர்களுக்கு சம மதிப்பு அளிக்கப்படாத ஒரு நாட்டில், இவ்வாறான வன்முறைகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க முடியாது.
பாவம் அப்பாவி உயிர்கள்.
நன்றி: முகநூல் – ‘இனமொன்றின் குரல்’