கைதிகளைச் சுடுவதை எந்தவொரு மனித உரிமைகள் சட்டப்படியும் நியாயப்படுத்த முடியாது – மக்கள் போராட்ட முன்னணி கண்டனம்!

சிறைச்சாலையின் நுழைவாயில் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை உள்ளே நுழைத்துக் கைதிகள் மீது சுடுவதை எந்தவொரு மனித உரிமைகள் சட்டப்படியும் நியாயப்படுத்த முடியாது என மக்கள் போராட்ட முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் குறித்து விளக்குவதற்காக நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலை அசம்பாவிதத்தினால் இதுவரையில் 26 மரணங்கள் பதிவாகியுள்ளன. […]

எனது சிறப்புரிமை கஜேந்திரகுமாரால் மீறப்பட்டுள்ளது -அர்ச்சுனா இராமநாதன்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை நோக்கி மிகக் கேவலமான முறையில் அசிங்கமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரையில் அவரை பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழுவில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் […]

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் உயிரை மாய்க்க முயற்சி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தைப் பிளேடால் (Blade) அறுத்து உயிரை மாய்க்க முயற்சித்த இளைஞர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று நண்பகல் 12.00 மணியளவில் குறித்த இளைஞர் தனது கழுத்தைப் பிளேடினால் அறுத்து உயிரை […]

‘பிரேமதாச–ராஜபக்ஷ’ பெயர்களே நாட்டின் தொல்பொருள் திருட்டுகளில் அதிகம் பேசப்படுகின்றன – அருண் ஹேமச்சந்திரா

நாட்டின் பெறுமதிமிக்க புராதன தொல்பொருட்கள் மற்றும் புதையல் திருட்டுகள் தொடர்பில் அரசியல் தலைமைத்துவத்தில் இருந்த இரு பிரதான குடும்பங்களான ‘பிரேமதாச’ மற்றும் ‘ராஜபக்ஷ ‘ பெயர்களே அதிகம் குறிப்பிடப்படுகின்றன என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அண்மையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து […]

நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் வெற்றிடமாக நிலவிய ஆணையாளர் பதவிக்கு, இலங்கை நிர்வாகச் சேவையின் தரம் I அதிகாரியான யூ.எல். மதீஷா ஜினஞ்சலி ஜயதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவர் இதற்கு முன்னர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்பாளராக (அபிவிருத்தி) பணியாற்றி வந்ததுடன், நன்னடத்தை ஆணையாளர் பதவியின் கடமைகளை வினைத்திறனுடன் வழிநடத்துவதற்காக அவரிடமுள்ள தகைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தினர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இன்று (07) விளக்கமளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த […]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின் சுமார் 57 நீதிபதிகள் பணி இடைநீக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த சுமார் 57 நீதிபதிகள் அண்மைக்காலத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மற்றொரு நீதிபதிகள் குழு தற்போதைக்கு கட்டாய விடுமுறையில் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் கொழும்பு கோட்டை முன்னாள் மாஜிஸ்திரேட் திலின கமகே, மஹியங்கனை மேலதிக மாவட்ட நீதிபதி ரங்கனி கமகே, மட்டக்களப்பு முன்னாள் நீதவான் முகமது ஹம்சா மற்றும் வெள்ளவாய நீதவான் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த […]

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து ஐநா கவலை; சிறைச்சாலைச் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (UN Resident Coordinator) மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் (Marc-André Franche), நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடிய வன்முறைச் சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுயாதீனக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், குறைந்தது 27 பேரின் உயிரைப் பறித்ததுடன், 100 க்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்த இந்த வன்முறைச் […]

மொன்றியால் வீதி விபத்து: காரினுள் சிக்கியிருந்த பயணி நள்ளிரவு மீட்புப் பணியில் பத்திரமாக மீட்பு

நள்ளிரவில் நிகழ்ந்த ஒற்றை வாகன விபத்தில் (single-vehicle crash) ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து மொன்றியால் வீதியில் (Montreal Road), செயின்ட் லாரன்ட் புல்வார்ட் (St. Laurent Boulevard) அருகே அதிகாலை 1:30 மணிக்கு சற்று முன்பாக நடந்துள்ளது. ஒட்டாவா அவசர மருத்துவ உதவிப் பிரிவின் (paramedic) ஊடகப் பேச்சாளர் மார்க்-ஆண்டோயின் டெஷாம்ப்ஸ் (Marc-Antoine Deschamps), CTV News ஒட்டாவா ஊடகத்திற்குத் தெரிவிக்கையில், காரை ஓட்டி வந்தவர் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், சீரான உடல்நிலையுடன் மருத்துவமனைக்குக் […]

தமிழ் அரசியல் கைதிகளும் சிறைக்கம்பிகளும் – சம கால அரசியல் பார்வை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலும் பாதுகாப்பு என்பது ஒரு பொய்க்கனவாகவே இருந்திருக்கிறது. பாதுகாக்க வேண்டிய சிறை அதிகாரிகளின் கைகளிலேயே கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டு கோத்தபாயா ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது காலம் சென்ற அமைச்சர் லொஹான் ரத்வத்தே , அனுராதபுரத சிறைசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து, தமிழ் அரசியல் கைதிகளைத் து*ப்பாக்கி முனையில் பிடித்து வைத்து, அவர்களைக் கொ*ன்றுவிடுவதாக மிரட்டியிருந்தார் . 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தின் போது வவுனியா […]