ரணில், விஜயதாஸவை நேரில் சந்திப்பு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் விஜயதாஸ ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுடன் விஜயதாஸ ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சென்ற விக்ரமசிங்க, அவரது நலன் குறித்து விசாரித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘சண்டே டைம்ஸ்’ அறிக்கையின்படி, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நடூன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் முறையான சட்ட வழிமுறைகளே பின்பற்றப்பட்டதாக அங்கு கூடியிருந்தவர்களிடம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தான், ‘ஹரக் கட்டா’ தொடர்பான ஆவணங்கள் உட்பட அனைத்துப் பொருத்தமான ஆவணங்களையும் தனது ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிநபரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஹரக் கட்டா’வை விஜயதாஸ ராஜபக்ஷ தவறான முறையில் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். அரச காவலில் உள்ள ஒரு நபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருவது, கைதிகளைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்குவதற்கும் அரசாங்கத்திற்குள்ள பொறுப்புடன் ஒத்துப்போகும் ஒரு விடயமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கொன்றில் செல்வாக்கு செலுத்துவதற்காகப் பணம் கோரப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியில், விஜயதாஸ ராஜபக்ஷவும் அவரது மகனும் டுபாயில் தங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்து, தற்போது விஜயதாஸ ராஜபக்ஷவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வார தொடக்கத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் ஒரே நேரத்தில் டுபாயில் தங்கியிருந்தமைக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த சட்டவிரோதச் செயலுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைத் கண்டறிய புலனாய்வாளர்கள் முயன்று வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ha

ஆடைக் கடையில் கொள்ளை

November 25, 2026

ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர

m

நிலவைச் சுற்றி பிரம்மாண்ட சூரிய மின்தகடு வளையத்திலிருந்து அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்?

November 25, 2026

நிலவைச் சுற்றி 6,800 மைல் (சுமார் 11,000 கிலோமீற்றர்) நீளத்திற்கு அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளின் வளையத்தின் ஊடாக, பூமி முழுவதும்

ha

கல்லரிச்சலில் ஆட்டுப்பண்ணைக்குத் தீ: ஆடுகள் கருகிப் பலி

November 25, 2026

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் பண்ணை

sajith-2

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சம் கூடாது!

November 25, 2026

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சமற்றதும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ye

இலங்கைப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறத்தில்…

November 25, 2026

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இலங்கைப் பாராளுமன்றம் புதன்கிழ​மை

dough ford

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மிகுந்த நம்பிக்கை

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என ஒன்ராறியோ மாகாண

carney truump 50

அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தத்திற்கு முன்னதாக பிரதமர் மார்க் கார்னிக்கு முன்னாள் அமைச்சர் ஜேம்ஸ் மூர் எழுப்பியுள்ள அவசரக் கேள்விகள்

November 25, 2026

ஒட்டாவா, நவ. 25: அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் புதிய வர்த்தக மற்றும் வரி ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள

WK2QV3VPEVASVGVMHZKCSFRSJM

ஸ்கார்பரோவில் வாகனம் மோதியதில் பெண் பாதசாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய பெண்

Murder

நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன்!

November 25, 2026

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகக் படுகொலை செய்துவிட்டுப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 26 வயதுடைய கணவன், வாகரைப் பொலிஸாரால்

gend

“நீதியை உறுதிப்படுத்துவோம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம்’: பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரச்சாரம்!

November 25, 2026

ல்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு பிரச்சாரத்தை முன்னிட்டு, தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளை

acci main

வெவ்வேறு விபத்துகளில் அறுவர் உயிரிழப்பு!

November 25, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் மற்றும் 82