கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி  ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி) போராட்டம்-பாதிக்கப்பட்டோர் அழைப்பு 

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி) போராட்டமொன்றுக்கு பாதிக்கப்பட்டோர் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்

இங்கு 55 பொதுமக்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளும் 4 பொதுமக்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் 17 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்துள்ளார்கள்

விவசாயம் , தெங்குப் பயிர்ச்செய்கை, நன்னீர் மீன்படி என மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான மிக வளமான நிலப்பரப்பை ஆக்கிரமித்து அப்பாவி பொதுமக்களை அகதிகளாக வீதியில் நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்

இதுமட்டுமின்றி இங்கு பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட பொதுமக்களின் குடியிருப்புக்கள் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியுள்ளன

அதாவது தங்களது பூர்வீக நிலங்களில் குடியேறி சுதந்திரமாக விவசாயம் செய்து வாழ்வதற்கான உரிமையை கோரும் அந்த மக்களின் அடிப்படை உரிமையை இராணுவம் மறுத்து வருகின்றது

மிக முக்கியமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல நூற்றுக்ணணக்கானோர் இங்கே கொ*ன்று புதைக்கப்பட்டு இருக்கலாம் என்கிற வலுவான சந்தேகத்திற்கு மத்தியில் இராணுவம் நில கட்டமைப்பை மாற்றியிருக்கின்றார்கள்

பொதுமக்களின் வீடுகளை அழித்து இருக்கின்றார்கள்

அடையாளம் தெரியாமல் கிணறுகளை மூடியிருக்கின்றார்கள்

புதிய எல்லைகோடுகளை வரைந்துள்ளனர்.

இதுபோததென்று தங்கள் நிரந்தர பயன்பாட்டுக்கென பங்களாக்கள் உட்பட புதிய கட்டடங்களை சட்டவிரோதமாக அப்பாவி பொதுமக்களின் காணிகளில் நிர்மாணித்திருக்கின்றார்கள்

தங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கும் இராணுவம் காடுகளுக்குள் மாற்று காணி தருவதாக சொல்லுகின்றார்கள்

மறுபுறம் மாற்றுக்காணிகள் கொடுக்கப்பட்டு விட்டதாக தவறான தகவல்களை அறிக்கையிடுகின்றார்கள்

“மக்களின் காணிகள் மக்களுக்கே” என பேசி ஜேவிபி அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் கூட எந்த மாற்றமும் இல்லை

குறிப்பாக வறுமையான நாட்டில் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்க கூடிய வளமான நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து பொதுமக்களை அகதிகளாக விரட்டி விட்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என பேசி கொண்டு இருக்கின்றார்கள்

முல்லைத்தீவு 621,917 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டிருக்கின்றது, இதில் 420,300 ஏக்கர் நிலம் வன வள திணைக்களத்தில் கட்டுப்பாட்டில் இருக்கின்றது .

அந்த வகையில் 201,617 ஏக்கர் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது

இங்கே பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய 201,617 ஏக்கர் நிலப்பரப்பில் 40 % ஐ இராணுவம் உட்பட்ட மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன

விசேடமாக அரச செயலகங்களின் தரவுகளின் படி முல்லைத்தீவில் ஏறத்தாழ 1,578.27 ஏக்கர் காணிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது

ஆனால் மாவட்ட செயலக தரவுகளுக்கு மேலதிகமான 16,910 ஏக்கருக்கும் அதிகமான தனியார் நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கின்றனர் என Oakland Institute உட்பட்ட நிறுவனங்கள் அறிக்கையிட்டு இருக்கின்றன

இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பில் பொதுமகன் ஒருவருக்கு 2 இராணுவம் என்கின்ற வகையில் இராணுவ கட்டமைப்புகள் செறிவாக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கின்றது

இந்த மிக நெருக்கமான இராணுவ ஆக்கிரமிப்பு வலையமைப்புக்குள் கேப்பாபுலவும் சீரழிந்து வருகின்றது

விவசாயம், கடற் தொழில் , விலங்கு வேளாண்மை என எல்லா பொருளாதார தளங்களிலும் பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெருன்பான்மையான மக்கள் வறுமை கோட்டுக்குள் வாழும் முல்லைத்தீவின் பொருளாதார எதிர்காலம் கேப்பாப்புலவு உட்பட்ட பொதுமக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து உச்சமாக பயன்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது

police rcmp

ஒட்டாவாவில் 14 மணித்தியாலங்களுக்கும் மேலாக பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸாரால் மீட்பு

July 3, 2026

ஒட்டாவா குடியிருப்புப் பகுதி ஒன்றில் பாரிய பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நிலவி வந்த பிணைக்கைதி விவகாரம், 14 மணித்தியாலங்களுக்கும் மேலான

canada rain

இந்த கோடைகாலத்தில் நிலவும் அதீத காலநிலை மாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன?

July 3, 2026

இந்த கோடைகாலத்தில் கனடாவின் எந்தவொரு பகுதியை உற்று நோக்கினாலும், மக்கள் பல்வேறு வகையான தீவிர காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

X6NZHLCWWUNIWHTLIV5HUMMF6A

கியூபெக் நகர் அருகே காடுகளடர்ந்த பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி: பொலிஸார்

July 3, 2026

கடந்த வாரம் காடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயதுடைய பெண், ஒரு கொலைக் குற்றத்திற்கு (homicide) ஆளாகியுள்ளார் என்று கியூபெக்

fire

பரி (Barrie) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ‘கணிசமான சேதம்’

July 3, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தென்கிழக்கு பரி (Barrie) பகுதியில் உள்ள வீடொன்று ‘கணிசமான அளவில்’ சேதமடைந்துள்ளதாக

dr

அனைத்து அரச நிறுவனங்களும் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்

July 3, 2026

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி

toronto poli

ஸ்கார்பாரோ பூங்காவில் கத்தியுடன் வந்த சந்தேகநபர் ஒருவர் நபர் மீது தாக்குதல்: பொலிஸார் தகவல்

July 3, 2026

ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொரண்டோ

kepa 11

கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி  ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி) போராட்டம்-பாதிக்கப்பட்டோர் அழைப்பு 

July 3, 2026

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி)

735393744_122205327890574891_1122860786103625680_n

தொல். திருமாவளவன்-தமிழ் தேசியப் பேரவைசந்திப்பு

July 3, 2026

இன்று (03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல்.

8

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் – அமைச்சர் கீர்த்தனா உறுதி

July 3, 2026

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கோவையின் தொழில் வளர்ச்சிக்கான

7

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகல்

July 3, 2026

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்

peel poli

‘பாரிய’ சில்லறை விற்பனைத் திருட்டு விசாரணை குறித்த விபரங்களை வெளியிடவுள்ள பீல் பொலிஸார்

July 3, 2026

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) வெள்ளிக்கிழமை காலை ஸ்கொயர் ஒன் மால் (Square One Mall) வணிக

6_dmk-mla-anitha-radhakrishnan-arrested-political-reactions-03-07-2026

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது; மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்

July 3, 2026

ஆத்தூர்: முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க.