திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்பாக சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (2) உத்தரவிட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலில் உள்ள பிரதேச சபையை நோக்கி பயணித்தபோது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.