சென்னை:
முதல்வர் விஜய் தலைமையில், தவெக-வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, ம.தி.மு.க, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவளத்தில் இன்று நடைபெற்றது. ஐந்து ஆண்டுகள் எவ்வித தடங்கலும் இன்றி ஆட்சியைத் தொடரவும், கூட்டணியை ஒருங்கிணைக்கவும் இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் கூட்டணிக்கு ஒரு வலுவான பெயரைச் சூட்டுவது மற்றும் அரசின் ஸ்திரத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தவெக தலைமையிலான இந்தக் கூட்டணி இயற்கையானது என்றும், இது தமிழகத்தின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆட்சி கவிழ்ப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இணைவதும், தவெக-வின் கூட்டணி வலுவடைந்து வருவதும், தமிழக அரசியல் களத்தில் தவெக-வை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.
#Tvk #Vijay #Alliance #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #AllianceMeeting #Politics2026 #Governance #TamilNaduPolitics #PoliticalStability #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash