16 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மேன்முறையீட்டு மனு தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நான்கு மேன்முறையீட்டு மனுக்களை முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்களை குத்தகைக்கு எடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக, சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது.

விசாரணை நடவடிக்கைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

அதனை தொடர்ந்து அவருக்கு, ஒவ்வொரு வழக்கிற்கும் தலா நான்கு வருடங்கள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் நீதிமன்றம் 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதித்தது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்களின் மூலம், மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அபராதத்தை இரத்து செய்யுமாறு பிரதி அமைச்சர் சரண குணவர்தன கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PVHUQOTZQFGQ3ARP7TQN4ZLLBM

கனடா தினத்தில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையான செய்தியைப் பகிர்ந்து கொண்ட ஆல்பர்ட்டா முதல்வர்

July 1, 2026

ஆல்பர்ட்டா (Alberta) மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith), தனது கனடா தினச் செய்தியில், பொதுவான விழுமியங்களைச் சிந்தித்துப்

2LNSZ2MUP7S2PXR64RC7U5LL5A

பிரிவினைவாத இயக்கங்கள் உருவெடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் கனடா தினக் கொண்டாட்டங்கள்

July 1, 2026

ஒட்டாவா (OTTAWA): மாறிவரும் உலகச் சூழல் மற்றும் உருவெடுத்து வரும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு மத்தியிலும், கனடியர்கள் புதன்கிழமை அன்று நாடு

Nalinda Jayatissa Cabinet Meet-790605

யாழ்ப்பாண மாநகர சபை கட்டடத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்கு ரூ. 1.96 பில்லியனை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

யாழ்ப்பாண மாநகர சபைக் கட்டடத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக, ஏர்-கண்டிஷனிங் (குளிர்சாதன) கட்டமைப்பு வசதிகளை நிறுவுவது

8

விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதியாம்.. தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி பேரமாம்! போலீசார் தகவல்

July 1, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டதாக தி.மு.க. முன்னாள்

carney july1

நாம் உண்மையான கனேடியர்களாக இருக்கும்போது கனடா வளர்கிறது: இதுவே நமது நம்பிக்கை – பிரதமர் கார்னி

July 1, 2026

தனது வருடாந்த கனடா தினச் செய்தியில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமை, தயாள குணம் மற்றும் வலிமை

7

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு- கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

July 1, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில், தவெக-வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, ம.தி.மு.க, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6

“மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” பிலிகுண்டுலுவில் தொடங்கியது அன்புமணியின் நடைபயணம்

July 1, 2026

தருமபுரி: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிலிகுண்டுலுவில்

5

கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: அனுமதி நீட்டிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

July 1, 2026

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு,

4

“திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்” – அமைச்சர் நிர்மல்குமார்

July 1, 2026

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற

Pa

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

July 1, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில்

Thil

நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

July 1, 2026

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர

Cabinet de

கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.