முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் (Private Secretary) பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (Colombo Central Crimes Investigations Bureau) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவரது செயலாளராகப் பணியாற்றிய போது, சுகீஸ்வர பண்டார அரசாங்கத்திடமிருந்து இரண்டு வெவ்வேறான சம்பளங்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் என்ற ரீதியில் ஒரு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டதற்கு மேலதிகமாக, சுகீஸ்வர பண்டார ஒரு திட்டப் பணிப்பாளர் (Project Director) என்ற பதவியிலும் அதே நேரத்தில் ஒரே காலப்பகுதியில் இரண்டாவது சம்பளம் ஒன்றையும் பெற்று வந்துள்ளார்.