புலம்பெயர் அமைப்புகளின் நிதி தொடர்பில் அர்ச்சுனா விளக்கம் வழங்க வேண்டும் – சீலரத்ன தேரர் வலியுறுத்தல்

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். எனவே அவர் நாட்டு மக்களுக்கு சில முக்கிய விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எத்தனை மில்லியன் டொலர்கள் அல்லது பில்லியன் டொலர்கள் நிதியுதவி பெற்றுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மேலும் கண்டறிக
South Asians & Diaspora
விளையாட்டு செய்திகள்
Beaches & Islands

புலம்பெயர் அமைப்புகள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக எந்தளவிற்கு நிதி உதவிகளை வழங்கின என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இன்று புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து ஒரு சதமும் கிடைக்காது என கூறப்படுகின்றது. அவ்வாறெனில் இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி எங்கே சென்றது என்பதையும் மக்கள் அறிய விரும்புகின்றனர்.

அந்த நிதி எந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது, எந்த நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டது என்பன தொடர்பில் தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த நாட்டை பலவீனப்படுத்துவதற்கும் தேசிய அடையாளத்தை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சித்து வருகின்றன என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுகின்றது.

குறிப்பாக புத்தசாசனத்தை பலவீனப்படுத்தவும், நாட்டின் பாரம்பரிய மத மற்றும் கலாசார அடித்தளங்களை சீர்குலைக்கவும் சில தரப்புகள் திட்டமிட்டு செயற்படுகின்றன என்ற அச்சம் எழுந்துள்ளது.

புலம்பெயர் அமைப்புகளுக்கு இவ்வளவு பெரியளவில் நிதி எங்கிருந்து கிடைக்கின்றது என்பதையும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. அந்த நிதி எந்த நோக்கத்துக்காக சேகரிக்கப்படுகின்றது, யாருடைய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றது என்பதும் மக்களுக்கு தெரியவர வேண்டும்.

நாங்கள் எந்தவொரு புலம்பெயர் அமைப்பிற்கும் தேவையான வகையில் இந்த நாட்டை நடத்த அனுமதிக்கப் போவதில்லை. நாட்டின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் புத்தசாசனத்தை பாதுகாப்பதற்காக எப்போதும் குரல் கொடுப்போம்.

இந்த நாட்டை வெளிநாட்டு தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க முயற்சிப்பவர்களுக்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவோம்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உண்மையில் நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தால், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்துக்கிடையிலான தொடர்புகள் தொடர்பில் முழுமையான தகவல்களை நாட்டுக்கு வெளியிட வேண்டும். மக்களிடம் கேள்விகளை எழுப்புவதற்கு முன்னர் அவர் அவற்றுக்கான பதில்களையும் வழங்க வேண்டும்

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது