தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை

உணவு தயாரிப்பின் போதும், உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, நீண்டகாலமாக பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான நோய்த்தாக்கங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

“காலை வேளையில் தேநீர் தயாரிக்கும் போது, கொதிக்கும் சுடுநீரை தேயிலையுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்களில் போடுகிறோம் அல்லவா. பிளாஸ்டிக் போத்தல்கள், சாப்பாட்டுப் பெட்டிகள் போன்றவற்றில் முறையான தர நிர்ணயம் இருப்பதில்லை. அதேபோல், வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்து தண்ணீர் போத்தலைக் கொண்டு செல்லாமல் கடையிலிருந்து தண்ணீர் போத்தல்களை வாங்குகிறோம். இவை அனைத்திலும் நமக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் செயல்படுகின்றன.

இவற்றைத்தான் நாம் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ (Microplastics) என்று கூறுகிறோம். அத்துடன், பிபிஏ (BPA) போன்ற வேறு சில நச்சு இரசாயனங்களும் பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ளன. சில நேரங்களில் குழம்பு வகைகளை பொலித்தீன் உறைகளில் கொண்டு வருகிறோம். சாப்பாட்டுப் பொதிகளில் பொலித்தீனில் கட்டப்பட்ட உணவே இருக்கிறது. இவை அனைத்தின் மூலமும் பெருமளவிலான நச்சுக்கள் உடலுக்குள் நுழைகின்றன.

இந்த நச்சுக்கள் நீண்டகாலமாக உடலில் சேரும் போது, அவை நமது இரத்த நாளங்கள் ஊடாகப் பயணித்து மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் படிந்துவிடுகின்றன. இவ்வாறு நீண்டகாலம் படிந்திருக்கும் போது அந்த உறுப்புகள் செயலிழக்கக்கூடும். மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களும் உண்டாகலாம்.

பிபிஏ போன்ற இரசாயனப் பொருட்களால் ஹோர்மோன் குறைபாட்டு நோய்கள் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற அசாதாரண நிலைகள் ஏற்படலாம். பலவிதமான தொற்றா நோய்கள் மற்றும் நீண்டகால அழற்சித் தன்மைகள் கூட உருவாகலாம். இறுதியாக, இவை பல்வேறு வகையான புற்றுநோய்களாக வளர்ச்சியடையக்கூடும்.

எனவே, நாம் உணவைத் தயாரிக்கும் போது சுகாதாரப் பாதுகாப்பான உபகரணங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே உணவுப் பாதுகாப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். சமையலின் போது மண்பாண்டங்கள், உலோகம், கண்ணாடி மற்றும் செராமிக் பாத்திரங்களை நாம் பயன்படுத்த முடியும்…” என்றார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்