சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில் தனது நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்துள்ளது.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 34 வயதுடைய பெண் ஒருவர் மீது, அவுஸ்திரேலிய பொலிஸார் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியா வந்தடைந்த அந்தப் பெண், எதிர்வரும் வியாழக்கிழமை மெல்பர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது மற்றும் தடைசெய்யப்பட்ட போர் மண்டலத்திற்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றங்களுக்கு அவுஸ்திரேலியச் சட்டப்படி, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியக் கூட்டாட்சிப் பொலிஸாரின் உதவி ஆணையர் ஹில்டா சைரெக் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய அந்தப் பெண் கடந்த 2013 அல்லது 2014ஆம் ஆண்டில் சிரியாவிற்குப் பயணம் செய்ததாகவும், அதன் பின்னர் 2019 இல் குர்திஷ் படைகளால் பிடிக்கப்பட்டு அல்-ஹோல் முகாமில் தனது குடும்பத்தினருடன் அடைக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிரியாவின் ரோஜ் முகாமில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு அழைத்து வரப்பட்ட பெண்களில், கவ்சர் அகமது, ஜைனப் அகமது ஆகிய தாய் மற்றும் மகள் மீது அடிமைப்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளும், ஜானை சஃபார் என்ற மற்றொரு பெண் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததற்கான குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிரியாவில் இருந்து திரும்பிய அனைத்து பெரியவர்களிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதில் ஏற்படும் காலதாமதம் விசாரணை நிறுத்தப்பட்டதைக் குறிக்காது என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் அவுஸ்திரேலிய அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இவர்கள் நாடு திரும்புவதற்கு அரசாங்கம் எந்தவித உதவிகளையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டதோடு, “நீங்கள் செய்த படுக்கையில் நீங்கள் தான் படுக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

எனினும், மனித உரிமை அமைப்புகள் தங்களது சொந்த நாட்டு குடிமக்கள் தாயகம் திரும்புவதற்கான உரிமையை அவுஸ்திரேலியா மதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக பெற்றோர்கள் செய்த தவறுகளுக்குக் குழந்தைகளைப் பொறுப்பாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன.

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா