முள்ளிக்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான நிலம் இராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை – அருண ஜயசேகர

முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது.

முள்ளிக்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான நிலம் இராணுவத்தின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது நிலங்களுக்குத் திரும்ப முடியவில்லை என்பது குறித்த தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இல்லை.

மன்னார் மாவட்டம், மரிச்சிக்கட்டி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வனப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 245.9 ஹெக்டேயர் நிலம், 2009ஆம் ஆண்டு முதல் கடற்படை முகாமுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்படை பல முறை அந்த நிலத்தின் பகுதிகளை விடுவித்துள்ளது. மிகச் சமீபத்திய காணி விடுவிப்பு 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது சுமார் 77 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டது. கடற்படை பயன்படுத்தும் நிலத்தில் அமைந்துள்ள 27 பொதுமக்கள் வீடுகளுக்காக 2012ஆம் ஆண்டில், மணல்காடு கிராமத்தில் 27 வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

கடற்படை தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது.

இந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு முறையான வீட்டு வசதிகள் வாழ்வாதார வாய்ப்புக்கள் மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த மக்களுக்கு அரசாங்கம் இதுவரை என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் தகவல் ஏதும் இல்லை.

மேலும் கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்திற்குள் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயமும், ஒரு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்புப் பாடசாலையும் அமைந்துள்ளன. அப்பகுதியை கடற்படை 77 ஏக்கர் நிலத்தை விடுவித்துள்ளதோடு அந்த இடங்களுக்கு வருவதற்கு நுழைவுப் பாதை கடற்படை விடுவித்துள்ளதோடு கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கலப்புப் பாடசாலையின் செயல்பாடுகளை எளிதாக்கும் பொருட்டு சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்கத் தமிழ் கலப்புப் பள்ளிக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கடற்படை வழங்குகிறது. இலவசப் பாடசாலை போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடற்படையால் சம்பள அடிப்படையில் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் கடற்படை வெளியேற்றவோ அல்லது எந்தவொரு பொதுமக்களையும் இடம்பெயரச் செய்யவோ இல்லை. மொத்தமாக சுமார் 829 ஏக்கர் நிலப்பரப்பு, பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் பிரதேசத்தில் தற்போது கடற்படையால் பயன்படுத்தப்படும் 245.9 ஹெக்டேயர் நிலப்பரப்பில் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததும், கடற்படைக்குத் தேவையானதுமான நிலப்பரப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தை வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கு பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண