கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சட்ட விரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகளை கடத்த முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட அரச வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சந்தேகநபர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.