கொக்கிளாய் – புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை

ல்லைத்தீவு – கொக்கிளாய் மற்றும் திருகோணமலை – புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குழு அறையில் நேற்று(21.05.2026) இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய் புல்மோட்டை இணைப்பு பாலம் அமைக்கப்படவேண்டும் என தொடர்ச்சியாக எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கடந்த 07.03.2025 அன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் குறித்த பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து 13.08.2025 ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கொக்கிளாய் – புல்மோட்டை பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தேன்.

இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதியால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து சாத்திய வள ஆய்வுகளும் உரிய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இத்தகைய சூழலில் கடந்த 11.02 2026 அன்று அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.

அந்தவகையில் குறித்த பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தரப்பினர், மே மாதத்திற்குள் அந்த சாத்தியவள ஆய்வுகளின் அறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பித்தால் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அப்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க என்னிடம் உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய 15.05.2026 கடந்தவாரம் இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வு அறிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவியிருந்தேன்.

இதன்போது குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கையை தாம் அமைச்சிற்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (21) நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி விடயங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில், குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகள் உரியதரப்பினரால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட விடயத்தினைச் சுட்டிக்காட்டப்பட்டது.

வரவு செலவுத்திட்டத்தில் பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு
அத்துடன், குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் விமல் ரத்நாயக்க வலியுறுத்தியிருந்தேன். அதற்கமைய இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்பு பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் சபையிலேயே கலந்துரையிருந்தார்.

குறிப்பாக இந்தப்பாலத்தை அமைப்பது தொடர்பில், ஏற்கனவே தம்மால் என்னிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விடயத்தை இதன்போது சுட்டிக்காட்டி உரிய அதிகாரிகளிடம் ஆய்வறிக்கை முடிவுகளைக் கேட்டறிந்து கொண்டார்.

அத்தோடு எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகளை எடுப்போமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இந்தப் பாலம் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களுக்கான பாலமென்பதால் அந்தப் பாலத்தை பயன்படுத்தப்போகின்ற அனைத்து மக்கள் சார்பாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.

அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் வன்னிமாவட்ட அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.