கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் (BIA) நிலவும் மோசமான காலநிலை காரணமாக, அங்கு தரையிறங்கவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச சர்வதேச விமான நிலையத்திற்கு (MRIA) திருப்பிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க மற்றும் அதனைச் சூழவுள்ள வான்பரப்பில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் போதியளவற்றVisibility எனப்படும் தெளிவற்ற காலநிலை (Poor visibility) காரணமாகவே, இவ்வாறு வருகை தந்த விமானங்கள் அவசரமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்த சுமார் ஆறு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு இவ்வாறு வெற்றிகரமாக திசைதிருப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.