மயிலத்தமடு-மாதவனை-மேய்ச்சல் தரைக்கு 1,570 ஏக்கர் நில ஒதுக்கீட்டுக்கு ஜனாதிபதி உத்தரவு

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மகாவலி அதிகார சபைக்கு அதிரடிப் பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.

பாரம்பரியமாக தமிழ் பால் பண்ணையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மாதவனை – மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறே ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பிற்காக மேற்படி நிலப்பரப்பை உடனடியாக விடுவித்து வழங்குமாறு மகாவலி திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

எதிர்காலத்தில் மேய்ச்சல் தரை சார்ந்து மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்டன:

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 10,900 மில்லியன் ரூபா நிதியில் முன்னெடுக்கப்பட்ட 2,306 வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், இவ்வாண்டு 8,625 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.

கிராமியப் பாலங்கள், வீதிகள், வீட்டுத்திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எஞ்சிய பணிகள் மற்றும் அவற்றுக்கான நிதித் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகளை வழங்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ள, இரண்டு குளங்களை இணைக்கும் ‘முந்தனையாறு நீர்ப்பாசனத் திட்டத்தின்’ கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி – மண்டூர் பாலங்களின் அபிவிருத்தி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் யானை-மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடையாளம் காணப்பட்ட சகல பகுதிகளுக்கும் யானை வேலிகளைப் பகிர்ந்தளித்து, அவற்றை அமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் காரியாலயம் இல்லாத காரணத்தால் நெல் கொள்வனவு சரிவர இடம்பெறவில்லை என்று மக்கள் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு உரிய முறையில் சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, அங்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள மூன்று புதிய திட்டங்களின் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்தத் தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் எனவும், வரவிருக்கும் பாதீட்டின் ஊடாக மாவட்டத்துக்குத் தேவையான கூடுதல் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை