உலகம் எதிர்கொண்டுள்ள புதிய நெருக்கடிகள்; இபோலா மற்றும் ஹண்டா வைரஸ்கள் குறித்து WHO தலைவர் அறிக்கை!

ஆபத்தான ஹண்டா வைரஸ் மற்றும் இபோலா வைரஸ் பரவலானது, ‘அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில்’ ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகள் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின் வருடாந்த தீர்மானம் எடுக்கும் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் காங்கோவில் ஏற்பட்டுள்ள புதிய இபோலா பரவல் குறித்து கருத்து தெரிவித்ததுடன், கடந்த வார இறுதியில் அதனை ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக அவர் பிரகடனப்படுத்தியிருந்தார்.

அத்துடன் ‘MV Hondius’ என்ற சுற்றுலா கப்பலில் இருந்து பதிவான அரிய வகை ஹண்டா வைரஸ் பரவல் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த இரு வைரஸ்களினதும் பரவலானது “நமது பிரச்சினைகள் நிறைந்த உலகின் புதிய நெருக்கடிகள் மட்டுமே” என்று கூறினார்.

“உலகளாவிய மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் நிதி வெட்டுக்கள் நிறைந்த, கடினமான, ஆபத்தான மற்றும் பிளவுகள் உள்ள ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா விலகியமை மற்றும் பெருமளவிலான நிதி வெட்டுக்கள் காரணமாக உலக சுகாதார அமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ள பின்னணியிலேயே, இந்த 2026 உலக சுகாதார பொதுச் சபை கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து சுகாதார அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர், உலக சுகாதார அமைப்பின் வரவுசெலவுத் திட்டம் 21% அதாவது சுமார் ஒரு பில்லியன் டொலர்களால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டு திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த அவசர நிலைக்கு மத்தியிலும் உலக சுகாதார அமைப்பினால் ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பட்டதாரி நிறுவனத்தின் உலகளாவிய சுகாதார மையத்தின் இணை இயக்குனர் சூரி மூன் சுட்டிக்காட்டுகையில், உலக சுகாதார அமைப்பு இந்த கடினமான காலப்பகுதியை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஹண்டா வைரஸ் நெருக்கடி மூலம், உலகிற்கு மிகவும் பயனுள்ள, நம்பகமான, நடுநிலையான மற்றும் நிலையான நிதியுதவியைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தேவை மிகத் தெளிவாகப் புலப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.