எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறை (QR Code) தொடர்ந்தும் அமல்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த செவ்வாய்க்கிழமை (19) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதற்கமைய , ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோக அளவு (Quota) விபரம்
மோட்டார் கார் – 25 லீட்டர்
முச்சக்கர வண்டி – 20 லீட்டர்
வேன் (Van) – 50 லீட்டர்
மோட்டார் சைக்கிள் – 8 லீட்டர்
பேருந்து (Bus) – 100 லீட்டர்
லொறி – 200 லீட்டர்
டிராக்டர் / காணி வாகனங்கள் (Land Vehicles) – 40 லீட்டர்
விசேட தேவைக்கான வாகனங்கள் (Special Purpose Vehicles) – 40 லீட்டர்