ஈழத் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகம் நீதி வழங்குமா – வைகோ

மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் சில நாடுகளில் நடந்த இனப் படுகொலைகளில் மிகவும் கோரமானதும், கொடூரமானதும், நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதுமான படுகொலை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை ஆகும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் குறித்த பதிவில்,

வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து தனி அரசு அமைத்து வந்த ஈழத் தமிழினம், ஐரோப்பியர்கள் படையெடுப்பால் அரசு உரிமை இழந்து, குறிப்பாக பிரித்தானியர்களின் ஆதிக்க ஆட்சியால் சிங்களவர்களோடு இணைக்கப்பட்டு, அவர்கள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறியபோது சிங்களவர்களின் அடிமை நுகத்தடியில் ஈழத்தமிழர்கள் உரிமை இழந்து கொடிய அடக்குமுறைக்கு ஆளானார்கள்.

தொடக்க காலத்தில் அறவழியில் போராடிய ஈழத்தமிழர்கள், சிங்கள இனவெறி அரசால் போலிசாராலும், இராணுவத்தாலும் வேட்டையாடப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் 1975 மே 5 ஆம் நாள் முதல் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

1987 ஆம் ஆண்டு இந்திய அரசு சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின் இந்திய இராணுவம் சிங்களவர்களுக்குத் துணையாக ஈழத்தமிழர்களை நசுக்கும் துரோகத்தில் ஈடுபட்டது.

அதிலும் குறிப்பாக 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தாக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டே சிங்கள இராணுவம் அப்பாவி தமிழர்களை கொடூரமாகத் தாக்கும் அக்கிரமத்தில் ஈடுபட்டது.

2009 ஆம் ஆண்டில் அதன் உச்சகட்டமாக மே மாதத்தில் குறிப்பாக 17, 18 திகதிகளில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழ்ப் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் சிங்கள அரசு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுடன், ஆயிரமாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. அதுவே முள்ளிவாய்க்கால் படுகொலை ஆயிற்று. தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 வாலிபர்கள் இக்கொடுமையை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டார்கள்.

சமர்க்களத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் சிந்திய இரத்தம், அவர்களின் தியாகப் போராட்டம் ஒருக்காலும் வீண் போகாது.

தாய்த் தமிழகத்தில் வாழும் தன்மானத் தமிழர்கள் நடத்தப்பட்ட இனப் படுகொலைக்குக் காரணமான சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழீழம் காண ஈழத்தமிழர்களிடம் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணவும் சூளுரை மேற்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக