பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவம்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம், நோர்வே ராஜ்யத்தின் நிதி உதவி மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் தன்னார்வத் திட்டம் ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கிய, புதிய டிஜிட்டல் நட்டஈடு முகாமைத்துவ அமைப்பு மற்றும் சமூக வினவல் பொறிமுறை நேற்று(18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான, மிகவும் வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சமூக ஆதரவு சேவைகளை வழங்கும் ஒரு செயல்முறையாகும்.

இந்த டிஜிட்டல் அமைப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் பங்கேற்புடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் இடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்வாக ரீதியிலான சிரமங்களைக் குறைக்கும் வகையில் இந்த நட்டஈடு முகாமைத்துவ அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஒன்லைன் மூலம் நட்டஈட்டுக் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.

அதேபோன்று, இன்று சமூக வினவல் பொறிமுறையும் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த பொறிமுறையின் ஊடாக பொதுமக்கள் தங்களது வினவல்களை நேரடியாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

இவ்வமைப்பிற்கு வார நாட்களில் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்கும் 071 6 807 807 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் அல்லது அதற்குரிய QR குறியீடு (QR Code) ஊடாக வினவல்களைச் சமர்ப்பிக்கலாம்.

ஆரம்ப பரிசீலனைக்குப் பின்னர், தேவையான நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பிற்காக ஒவ்வொரு வினவலும் NDRSC இன் தேசிய அல்லது பிராந்திய மட்டத்திலான உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு வினவலும் சமர்ப்பிக்கப்படும் போது, அதனைச் சமர்ப்பிப்பவருக்கு ஒரு தனித்துவமான குறியீடு (Unique Code) வழங்கப்படும்.

சமூக வினவல் பொறிமுறைக்குரிய QR குறியீடு அல்லது உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்தத் தனித்துவமான குறியீட்டை முன்வைத்து, தங்களது வினவல்களின் முன்னேற்ற நிலையை அவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

இந்த முயற்சியானது ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்