இறந்தவர்களால் நீதிக்காக அழ முடியாது; அவர்களுக்காக அதைச் செய்வது உயிரோடு இருப்பவர்களின் கடமையாகும்”.உமாகுமரன்

இறந்தவர்களால் நீதிக்காக அழ முடியாது; அவர்களுக்காக அதைச் செய்வது உயிரோடு இருப்பவர்களின் கடமையாகும்”.

என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இன்று, மே 18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை நாம் அனுஷ்டிக்கிறோம்.

17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இலங்கையில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதலின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவை நாம் போற்றுகிறோம் – இது இதுவரை நீதி கிடைக்கப் பெறாத ஒரு பேரழிவுகரமான கொடூரமாகும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் தப்பிப்பிழைத்தவர்களினதும் வலியும் வேதனையும் இன்றும் தொடர்கிறது; அது உலகளாவிய புலம்பெயர் தமிழர்களின் நினைவுகளில் ஆழப் பதிந்துள்ளது. கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் எங்களது துயரத்தையும் இழப்பையும் புதிய நினைவூட்டல்களாகக் கொண்டு வருகின்றன. செம்மணி-சித்தூபத்தி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளின் போது, குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட மீட்கப்பட்ட எச்சங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களின் அப்பட்டமான நினைவூட்டலாகும்.

ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும் போது, பொறுப்புக்கூறலுக்கான எங்களது குரல்கள் மேலும் வலுவடைந்து, மேலும் சத்தமாக ஒலிக்கின்றன. நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு உண்மையும் நீதியும் அவசியமானவை. இருப்பினும், மௌனமும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரமும் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், நீதிக்கான வாய்ப்பு மேலும் தூரமாய் போவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

நாங்கள் நினைவு கூர்ந்து துக்கம் அனுஷ்டிக்கும் இவ்வேளையில், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கின்றனர். இதுபோன்ற கொடூரங்கள் இனி ஒருபோதும் மீண்டும் நிகழாத ஒரு அமைதியான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இன்றும் என்றும், நாம் கடந்த காலத்தை மதிக்கிறோம் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களின் கதைகள் மௌனமாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறோம்.

உண்மை மற்றும் நீதிக்காகக் குரல் கொடுப்பதற்கு எனக்கு இருக்கும் பொறுப்பை நான் ஆழமாக உணர்கிறேன், மேலும் எனது குரலையும் எனது பதவியின் அதிகாரத்தையும் அதற்காகத் தொடர்ந்து பயன்படுத்துவேன்.

ஒன்றாக இணைந்து, உலகெங்கிலும் உள்ள எமது தமிழ் சமூகம் நீதிக்கான ஒரு கூட்டு குரலைக் கொண்டுள்ளது. அது ஒருபோதும் மௌனமாக்கப்படாது.

“இறந்தவர்களால் நீதிக்காக அழ முடியாது; அவர்களுக்காக அதைச் செய்வது உயிரோடு இருப்பவர்களின் கடமையாகும்”.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக