குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லை–ஈழத்தமிழர் பேரவை

குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லைஎன ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது
ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது


2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களையும் துப்பாக்கிகள் மௌனித்த பின்னரும் முடிவுக்கு வராத தமிழ் இனப்படுகொலையையும் இந்நாளில் நாம் நினைவு கூருகிறோம்.

பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அவர்களது நிலை என்னவென்று இதுவரை அறியப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு எதிராக கிளஸ்டர் குண்டுகள் ) போன்ற சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றங்களை எந்தவொரு தண்டனையுமின்றி தடையின்றி மேற்கொள்வதற்காக சாட்சிகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டனர்.

இதற்கான சான்றுகள் எந்தவொரு கேள்விக்கும் அப்பாற்பட்டவை. பல ஐநா அறிக்கைகள் மற்றும் சுயாதீன விசாரணைகளின் கண்டுபிடிப்புகள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை — ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் ஆகும்.

சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் – போரின் இறுதி மாதங்களில் உங்களது நடத்தை ஒரு “அமைப்பு ரீதியான தோல்வி என்று உங்களது சொந்த உள்வாரி மதிப்பாய்வே குறிப்பிட்டிருந்தது. 17 ஆண்டுகள் கடந்த பின்னரும்இ அந்தத் தோல்வியானது இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் தொடர்ச்சியான கலாச்சாரமாகவே மாறியுள்ளது.

குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லை. பாதுகாக்கப்பட வேண்டியவர்களைப் பாதுகாக்காதபோது ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ ) என்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்கள் இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்போதும் இலங்கைக்கு கடன் வழங்கும்போதும் உலக அரங்கில் அதன் அரசாங்கத்திற்கு மேடையமைத்துக் கொடுக்கும்போதும் தமிழ் தாய்மார்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தேடி தங்களது பத்தாவது ஆண்டு போராட்டத்திற்குள் கால் பதிக்கின்றனர்.

 

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்