திங்கட்கிழமை அதிகாலை டொராண்டோவின் பார்க்ஹேல் சுற்றுப்புறப் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
டஃபரின் வீதிக்கு (Dufferin Street) மேற்கே உள்ள கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் (King Street West) மற்றும் டின்டால் அவென்யூ (Tyndall Avenue) பகுதிக்கு அதிகாலை 3 மணிக்கு சற்று முன்பதாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், தோள்பட்டையில் கத்திக் குத்துக் காயத்துடன் காணப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை மீட்டனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் எவரினதும் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.