17ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளான இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு சுடர் ஏற்றி,மலரஞ்சலி, மற்றும் அகவணக்கம் செலுத்தினர்.
உறவுகளை இழந்த குடும்பங்களின் உணர்வுபூர்வமான பங்கேற்பால்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் துயரமிகு சூழல் நிலவியதுடன், நீதியும் கூட்டு நினைவுகூரலும் வலியுறுத்தப்பட்டன.


















