நமது மக்கள் அனுபவித்த துயரங்களால் நமது அடையாளம் சிதைந்துவிடவில்லை. அதிலிருந்தே அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘தமிழ் சமூக நினைவுச் சின்னம்’ (Tamil Community Memorial) திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பிறைக்குமரன் பேரின்பராசா, தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேணல் தரத்திலிருந்த தனது தந்தையின் வீரம் மற்றும் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்ததுடன், அவரது தைரியத்திற்கும் தியாகத்திற்கும் மதிப்பஞ்சலி செலுத்தினார்.

பேரின்பராசா தனது ஆறு வயதில், தனது தாயார் மற்றும் தம்பியுடன் தமிழீழத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிகழ்வில் பேசிய பேரின்பராசா:

“தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர், லெப்டினன்ட் கேணல் அக்பர் என்ற எனது வீரமிக்க தந்தையின் பெயரை நான் தாங்கி நிற்கிறேன்” என்று கூறினார்.

“முள்வேலிகள், அரண்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின்னால் கழிந்த எனது சிறுபிராயத்தை நான் நினைவு கூர்கிறேன். அது எங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எந்தவொரு குழந்தையும் அறியக்கூடாத ஒரு குழப்பம் அது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், எங்களது சுதந்திரம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் தினசரி நினைவூட்டும் ஒன்றாக அது இருந்தது.

அப்படியிருந்தும், சுதந்திரத்தின் உண்மையான விலையைப் பற்றி நான் நினைக்கும் போது, நான் ஒரு கருத்தியலைப் பற்றி நினைப்பதில்லை, முகங்களைப் பற்றித்தான் நினைக்கிறேன் – மாவீரர்களைப் பற்றித்தான் நினைக்கிறேன்.”

அவரது முழுமையான உரை கீழே:

“என் பெயர் பிறைக்குமரன் பேரின்பராசா. தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர், லெப்டினன்ட் கேணல் அக்பர் என்ற எனது வீரமிக்க தந்தையின் பெயரை நான் தாங்கி நிற்கிறேன். இங்கு வரையான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனது தாயாரின் கைகளைப் பற்றியபடியும், என் தம்பியை என் அருகிலும் வைத்திருந்ததைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில், ஒரு ஆறு வயதுச் சிறுவனாக நான் ஆஸ்திரேலியா வந்தடைந்தேன். எந்த நாடும் இல்லை, எந்தவொரு நிச்சயத்தன்மையும் இல்லை, நாங்கள் மட்டும்தான் இருந்தோம்.

முள்வேலிகள், அரண்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின்னால் கழிந்த எனது சிறுபிராயத்தை நான் நினைவு கூர்கிறேன். அது எங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எந்தவொரு குழந்தையும் அறியக்கூடாத ஒரு குழப்பம் அது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், எங்களது சுதந்திரம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் தினசரி நினைவூட்டும் ஒன்றாக அது இருந்தது. அப்படியிருந்தும், சுதந்திரத்தின் உண்மையான விலையைப் பற்றி நான் நினைக்கும் போது, நான் ஒரு கருத்தியலைப் பற்றி நினைப்பதில்லை, முகங்களைப் பற்றித்தான் நினைக்கிறேன் – மாவீரர்களைப் பற்றித்தான் நினைக்கிறேன்.

அவர்கள் எங்களது சுதந்திரத்தை வெறும் கொள்கையாக நம்பியவர்கள் மட்டுமல்ல, அதற்காகத் தங்களது இரத்தத்தைச் சிந்தியவர்கள். ஒரு நாளில் நாம் இது போன்றதொரு இடத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் நம்பிக்கையைச் சுமந்து போர்க்களங்களில் நின்றார்கள்.

வளர்ந்து வரும் போது, மாவீரர்கள் எனக்கு ஏதோ தூரத்து மாவீரர்களாகத் தெரியவில்லை. தங்களை விடப் பெரிய ஒரு விஷயத்தை (தாயகத்தை) நேசிப்பது என்றால் என்ன என்பதற்கு அவர்கள் ஒரு வாழும், மூச்சுவிடும் நினைவூட்டலாக இருந்தார்கள். என் தந்தை லெப்டினன்ட் கேணல் அக்பர் அந்த அன்பின் வடிவமாகத் திகழ்ந்தார். அளவற்ற துணிச்சலும், அதற்கும் மேலான அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு மனிதர் அவர். அவர் தனது மகன்களுக்காக மட்டும் போராடவில்லை, தலைநிமிர்ந்து, கைகளில் சுதந்திரத்துடன் வளரத் தகுதியுடைய ஒவ்வொரு தமிழ்க் குழந்தைக்காகவும் அவர் போராடினார். போர்க்களத்தில் என் தந்தை காட்டிய வீரம் மற்றும் புகலிடம் தேடிச் செல்லும் போது என் குடும்பம் எதிர்கொண்ட வலிமிகுந்த சகிப்புத்தன்மை ஆகியவையே இன்று நான் உங்கள் முன் நிற்பதற்குக் காரணங்களாகும்.

புலம்பெயர்ந்து வாழும் இளந்தமிழர்களாகிய நமக்கு, நமது அடையாளத்தைக் கையாள்வது என்பது மிகவும் சிக்கலான ஒரு பயணமாகும். வளர்ந்து வரும் போது, போரின் கொடூரமான யதார்த்தமும் தமிழ் இனப்படுகொலையும் பெரும்பாலும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டன. கற்பனை செய்ய முடியாத அதிர்ச்சிகளிலிருந்து தப்பிப்பிழைத்த குடும்பங்கள், சில சமயங்களில் அதை வீட்டில் அமைதியாகவே வைத்திருந்தன. தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒன்றை நமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்பினார்கள் – பயமில்லாத ஒரு சிறுபிராயம், பாதுகாப்பு என்பது ஆடம்பரம் அல்ல, அது ஒரு உறுதிமொழி என்பதை உணர்த்தும் ஒரு வாழ்க்கை.

ஆனால் உண்மை என்னவென்றால், நமது மக்கள் எதை அனுபவித்தார்களோ, நமது மக்கள் எதிர்கொண்ட வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் நாம் யார் என்பதை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. என் அம்மா எப்போதும் எங்களுக்கு நினைவூட்டுவது போல், நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று நாம் நிற்கும் இடத்தில் நிற்பதற்கு உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், கடந்த கால நினைவுகள் இல்லாத ஆசி என்பது துரோகமாகும்.

எனவே, பாதுகாப்பான வலயங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள் மந்தைகளைப் போல் திரட்டப்பட்டு, அங்கேயே படுகொலை செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை, தாய்மார்களை, தந்தையர்களை மற்றும் குழந்தைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவர்கள் பொய்களைக் கூறி ஏமாற்றப்பட்டு, கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

நமது மக்கள் அனுபவித்த துயரங்களால் நமது அடையாளம் சிதைந்துவிடவில்லை. அதிலிருந்தே அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சோதனைகள், இன்னல்கள் மற்றும் கற்பனை செய்ய முடியாத இழப்புகள் என்பன நாம் மறைக்க வேண்டிய வடுக்கள் அல்ல – அவைதான் நாம் யார் என்பதை உருவாக்கும் உண்மையான காரணிகள்.”

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்ப்டவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்

Sarana

முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

June 24, 2026

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை