கீழடி:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், தொன்மையான சிறிய வடிவிலான முழுமையான வட்டவடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டிருப்பது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி பஜாரில் உள்ள கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு இதுவரை 7 பெரிய அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுத் தொடர் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே பழங்காலச் செங்கல் கட்டுமானங்கள், சாயக் கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் அடுத்தடுத்துக் கண்டறியப்பட்டு வந்தன. முன்னதாக, கீழடியில் நடைபெற்ற 5-ஆம் கட்ட அகழாய்வின் போது இதே போன்ற ஒரு வித்தியாசமான வட்டவடிவ பானை கண்டெடுக்கப்பட்டது, ஆனால் அதன் மேற்பகுதி உடைந்த நிலையில் சேதமடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் எவ்வித சேதமும் இல்லாத, சிறிய வடிவிலான முழுமையான வட்டப்பானை பத்திரமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பானையின் அருகிலேயே உடைந்த நிலைையிலிருந்த சில சாயக்கிண்ணங்கள், பழங்காலக் கருப்பு நிறப் பானை மற்றும் வாய் அகன்று காணப்படும் இருவண்ண சுடுமண் பாத்திரம் (Bi-chrome ware) ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் தொடர்ந்து கிடைத்து வரும் இந்த அசாத்திய ஆதாரங்கள் மூலம், உலகப் புகழ்பெற்ற சிந்துவெளி நாகரிகத்திற்கு இணையான மிகத் தொன்மையான செங்கல் கட்டுமானங்களும், மேம்பட்ட நகர நாகரிகப் பயன்பாடும் தமிழர்களிடம் இருந்திருப்பது மீண்டும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
#KeeladiExcavation #Phase11Keeladi #AncientTamilCivilization #BreakingNews #May18 #ArcheologyIndia #KeezhadiArtifacts #SivagangaiDistrict #SangamAge #TamilHeritage #SangamTamilHistory #IndusValleyConnection #BrickStructures #AncientPottery #KeezhadiFindings #TamilPride #DiscoveryOfIndia #TamilNews #ThalapathyVijay #TVK_Government #CM_Vijay_Official_“`