உடன்குடி:
“முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியைச் சிங்கப்பூர் போல மாற்றி வைத்திருந்தார், ஆனால் அங்குள்ள மக்கள் கேடுகெட்டவர்கள்” எனத் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மிகக் காட்டமாகப் பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகன் 66,851 வாக்குகள் பெற்றுப் பலத்த போட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று உடன்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தவெக அரசு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், “எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள். இன்னும் 4 மாதங்கள் தான் இந்த தவெக ஆட்சி இருக்கும். தவெக அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்குத் திராணி இருந்தால், தனது வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வரட்டும். நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், இருவரும் திருச்செந்தூரில் நேருக்கு நேர் போட்டிப் போட்டுப் பார்ப்போமா? தமிழ்நாட்டில் கள்ள லாட்டரி சீட்டு விற்கவும் கொள்ளையடிக்கவும் தான் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பவர்களும் லாட்டரி விற்பவர்களுமே தவெக எம்.எல்.ஏ-க்களாக மாறியுள்ளனர்” என்று சாடினார்.
மேலும், முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து விமர்சித்த அவர், “பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாகப் பேசும் விஜய், முதலில் தனது மனைவிக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர் பதவியேற்பு விழாவிற்கு அவரது மனைவி, மகள் வந்தனரா? இப்படிப்பட்டவர் முதலமைச்சராக வந்துள்ளதால் தமிழகமே கெட்டுவிட்டது. வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தவெக எங்கும் நுழைய முடியாதபடி அடித்து விரட்டுவோம். அடுத்த 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என ஆவேசமாகப் பேசினார். கொளத்தூர் தொகுதி மக்களைப் பற்றி அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள இந்த அவதூறான பேச்சு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
#AnithaRadhakrishnan #KolathurControversy #AadavArjuna #VijayAsCM #BreakingNews #May17 #ThoothukudiPolitics #DMK_Speech #ThalapathyVijay #TVK_Government #TiruchendurMLA #PoliticalClash #StalinVsVijay #SaimaniacSpeech #TN_Politics #TamilNews #VijayMakkalIyakkam #UdangudiNews #DMK_Opposition #CM_Vijay_Official_“`