எங்களுக்குள் இல்லாவிட்டால் மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்!

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால், தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் சூழல் உருவாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

வளைகுடா போர் நிறுத்தப்பட்டு சுமுகமான சூழல் ஏற்பட்டால், அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தப் பார்க்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த வகையிலே இன்று பிரஜாசக்தி மூலமாக கிராம ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லாமல் தனித்து செயற்படுகின்றனர்.

அடுத்த வருடங்களில் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் மக்களின் ஆதரவு எந்தளவுக்கு இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், நிலக்கரி ஊழல் உட்பட பல்வேறு முறைகேடுகளால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது.

இத்தகைய நிலையில், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகளைத் தன் வசப்படுத்த முயற்சிக்கும். மாறாக அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவார்களே ஆனால் அவர்கள் நினைப்பது போல் பல மாகாண சபைகளை இழக்க நேரிடும்.

வடக்கு – கிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக மக்கள் விரும்பும் செயலினை மேற்கொள்ளவில்லையாயின், நாம் தேசியம் பேசி எதுவித பயனும் இல்லை. நாம் மக்களைக் காப்பாற்றுகிறோம் என்று நாம் உதட்டோரமே பேசுகின்றோம் என அர்த்தப்படும்.

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால், தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் சூழல் உருவாகும். குறிப்பாக அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக வரமாட்டார்கள் என்ற விரக்தியின் காரணமாக அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

இதனால் தேசிய மக்கள் சக்தியானது மாகாண சபைகளை கைப்பற்றுகின்ற அபாய நிலையை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் தேசியம் பேசும் அனைத்துக் கட்சிகளும் அருகதை அற்றவர்கள் என்ற நிலைக்கும், மக்கள் எங்களை புறக்கணித்துள்ளனர் என்ற நிலைக்கும் உட்படுவோம்.

அவ்வகையிலே எங்களது போராளிகள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தை நாங்கள் துச்சமாக மதித்திருக்கிறோம் என்றும் மக்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அபாய நிலைக்கு நாம் எப்போதும் செல்லக்கூடாது என்பது எனது கருத்தாகும்.

எனவே சுயநல செயற்பாடுகளை விட்டுவிட்டு, தேர்தல் ஒற்றுமையாக மட்டும் இல்லாமல், மக்களின் அனைத்து விடயங்களிலும் நாங்கள் ஒரு சக்தியாக மாறவேண்டும். இல்லையெனில், தேசியம் பேசும் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்