வீட்டுத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதித் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் – ரவிகரன்

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு அமைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியிலான வீட்டுத்திட்டங்களின் பெறுமதி அதிகரிக்கப்படவேண்டும் என தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில் ரவிகரனின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்ற குறித்த தீர்மானத்தை உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பது எனவும் இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. இதன்போதே ரவிகரனால் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டதுடன், மேற்கண்டவாறு முடிவும் எட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் தற்போது ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்துக்கென நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு கட்ட முடியாது.

தற்போது வெவ்வேறு திட்டங்களினூடாக மக்களுக்கு வீட்டுக்காக அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.

குறிப்பாக மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் என்பவற்றால் 2 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படவேண்டும்.

ஏற்கனவே தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல் இடைநடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்றன. தற்போதும் வீடமைப்பு அதிகாரசபையில் இவ்வாறு வீட்டுத் திட்டங்களுக்கென ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகின்றபோது மீண்டும் வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்த முடியாமல் இடைநடுவே கைவிடப்படுகின்ற நிலையே தோன்றும்.

இது தொடர்பில் ஏற்கனவே மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன். அந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.

அதேபோல இந்தக் கூட்டத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுத்து உரிய தரப்பினருக்கு அனுப்புவோம். இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றிலும் இது தொடர்பில் எம்மால் பேசப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கூறுகையில்,

இந்த விடயத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை மாத்திரமல்ல, சமுர்த்தி வீட்டுத்திட்டத்துக்கும் இவ்வாறுதான் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் சமுர்த்தி வீட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்து வழங்குமாறு எம்மால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்ற இந்த கூட்டத் தீர்மானத்தையும் உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்போம் என்றார்.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என