மட்டக்களப்பில் சிறுமியை கடத்திச் சென்ற முச்சக்கரவண்டி மடக்கிப் பிடிப்பு ; இருவர் கைது

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்குச் சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியை, சிறுமியின் பெற்றோர் வீதியில் மடக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தலோடு நேரடியாக தொடர்புடைய நபர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் அவர் திருமணமானவர் எனவும் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் கடத்தல் செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார், பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் சிறுமிகளை குறிவைத்து, அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் இளைஞர் கும்பல் ஒன்று அப்பகுதியில் நடமாடுவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தொடர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109

1600854-9-seeman

“சீமானின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்!” – தமிழக அரசுக்குப் பறந்த உத்தரவு!

October 10, 2026

மதுரை: மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்குத் தாமாக முன்வந்த நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பாராட்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“எடப்பாடி பழனிசாமியால் ’லெட்டர் பேடு’ கட்சியாகிவிட்டது அதிமுக!” – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்!

October 10, 2026

சென்னை: அதிமுகவை ’லெட்டர் பேடு’ கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.