பிடிகல – எல்பிட்டிய வீதியின் ஹேவஸ்ஸ, 4ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரமிருந்த சிறிய பாலத்தின் பாதுகாப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
பிடிகல, ஹேவஸ்ஸ பகுதியை சேர்ந்த ஹத்தக மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று, பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றிருந்த ஹால்பந்தெனி ஹேவகே சஹான் லக்ஷித என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மாணவனை எல்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.