இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் வட மாகாண ஆளுநருக்கும் ‘அபிவிருத் திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின்’ பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாட லொன்று நடைபெற்றது.
வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும், மக்கள் மன்றப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இச்சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள
ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இராணுவக் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் உள்ள பொதுமக்கள் மற்றும் மத நிறுவனங்களின் காணிகளை விடுவிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3,000 ஏக்கர் காணிகளை மக்கள் சட்டபூர்வமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரப்பட்டது.
உடனடியாக காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளா கத்தை, ஓர் இந்து கலாசாரப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காகப் பெற்றுக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வட மாகாண மக்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் மீள் எழுச்சிக்கான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன