மே தின மேடையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து; மக்கள் கூட்டு எதிர்க்கட்சியிடமிருந்து பிரதம நீதியரசருக்கு மகஜர்

மே தின மேடையில் நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அதன் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அது குறித்த விபரங்களை அந்த நீதிபதி மட்டுமே அறிவார் எனவும், அதனை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவது மிகவும் பாரதூரமான குற்றமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

”மஹரகமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மே 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பு மே 25ஆம் திகதி கிடைக்கும் என மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்தத் தீர்ப்பை கைதட்டி வரவேற்கத் தயாராக இருக்குமாறும் அவர் கூறியிருந்தார். ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அதனை ஒரு நபர் மட்டுமே அறிவார், அது அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மட்டுமே. அந்தத் தீர்ப்பை மூன்றாம் தரப்பினருக்குக் கூற அவருக்கு எந்த உரிமையும் இல்லை, அது குறித்து ஆலோசிக்கவும் முடியாது. நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவது என்பது பாரதூரமான குற்றமாகும்.

அவ்வாறு செய்பவர்களுக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் 5 வருட காலத்திற்குப் பிரஜாவுரிமை பறிபோகும் தண்டனையும் கிடைக்கும். எனவே, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என்ற ரீதியில் பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பத் தீர்மானித்தோம். இந்தத் தீவிரமான பிரச்சினை குறித்து அவரது கௌரவமான அவதானத்தைச் செலுத்துமாறு நாங்கள் கூட்டுக்கோரிக்கை விடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்