சென்னை:
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், கூட்டணிக் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வரும் சி. ஜோசப் விஜய், இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார்.
முதலமைச்சர் விஜய்யைத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அலுவலகத்திற்குள் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் சிறிது நேரம் உரையாடிய முதலமைச்சர், தவெக – காங்கிரஸ் இடையிலான அரசியல் உறவு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார். நேற்றிலிருந்து ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் மற்றும் காதர் மொய்தீன் எனத் வரிசையாக அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து வரும் விஜய்யின் இந்தச் செயல்பாடு, தமிழக அரசியலில் நிலவி வந்த “தீண்டாமை” அரசியலை உடைத்து, ஒரு புதிய ஆரோக்கியமான கலாச்சாரத்தை விதைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
#VijayAtCongressHeadquarters #Selvaperunthagai #Congress #VijayAsCM #TVK #BreakingNews #May12 #TamilNaduPolitics #SathyamurthiBhavan #Kamarajar #PoliticalCivility #ThalapathyVijay #NewGovernmentTN #HealthyPolitics #StalinAlliance #IndianNationalCongress #VictoryForVijay #ElectionResults2026 #TamilNews #CM_Vijay_Official_“`