சென்னை:
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், இன்று தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் ஆகியோரை விஜய் சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆரோக்கியமான அரசியல் நகர்வைக் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த அணுகுமுறை, ஒரு முதிர்ச்சியான அரசியல் நாகரிகத்தின் அடையாளம். முதலமைச்சருக்கும், அவரை இன்முகத்தோடு வரவேற்ற முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் களத்தில் நிலவிய கசப்புணர்வுகளை மறந்து, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைத்துச் செல்லும் முதல்வரின் இந்தச் செயல்பாடு, ‘புதிய அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம்’ என அரசியல் நோக்கர்களால் வரவேற்கப்படுகிறது.
#Thirumavalavan #VCK #VijayAsCM #PoliticalCivility #TVK #BreakingNews #May12 #TamilNaduPolitics #HealthyPolitics #StalinWishesVijay #ThalapathyVijay #NewGovernmentTN #UdhayanidhiStalin #VijayMeetsLeaders #SocialJustice #NewEraTN #TamilNews #VictoryForVijay #ElectionResults2026 #VijayMakkalIyakkam_“`