பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த படுவத்தே சாமர வழிநடத்திய சதித்திட்டங்கள் அம்பலம்

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கி வழங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ‘படுவத்தே சாமர’ என்ற மனோஜ் சுரங்க லியனகே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அஜர்பைஜானில் மறைந்திருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.

நீண்டகாலமாக டுபாயில் மறைந்திருந்து, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அஜர்பைஜானுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி அந்நாட்டு குடிவரவு சட்டங்களை மீறியமைக்காகவும், தனது காதலி எனக் கூறப்படும் அஜர்பைஜான் நாட்டுப் பெண் ஒருவருடன் தங்கியிருந்த போதும் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்நாட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசேட குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, டுபாயில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் கைதாகி வருவதால், அஜர்பைஜான் பாதுகாப்பானது எனக் கருதியே தாம் அங்கு சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர், “நான் ஒரு இதய நோயாளி, நெஞ்சு வலிக்கிறது, எனக்கு வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். இவர்கள் என்னைக் கொல்லவே அழைத்துச் செல்கிறார்கள், எனக்கு மருந்துகள் தருவதில்லை” எனக் கூச்சலிட்டு நாடகமாடியதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-196 விமானம் மூலம் நேற்று (10) இரவு 10.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் துறைமுகப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரிவோல்வர் ரகத் துப்பாக்கியை இஷாரா செவ்வந்திக்கு வழங்கியமை மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மீதான தாக்குதலை வழிநடத்தியமை ஆகிய குற்றங்களுக்குப் பின்னால் இவரே இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தவிர, ராகம படுவத்தை பகுதியில் ‘ஆமி உபுல்’ என்பவரைப் படுகொலை செய்ய வழிநடத்தியமை, கிராண்ட்பாஸ் பகுதியில் ‘குடு சுனிதா’ மற்றும் அவரது உதவியாளரைக் கொலை செய்யத் திட்டமிட்டமை மற்றும் கம்பஹா, ஜா-எல, பேலியகொட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்தமை போன்ற பல பாரிய குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்த இவர், இந்தியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான இப்ராஹிம் தாவூத் கும்பலின் இலங்கைப் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிசாந்த டி சொய்சா மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டிகே ஆகியோரின் வழிகாட்டலில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.