சிசு மரணத்திற்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கும் தொடர்பில்லை; திருமலை சம்பவம் குறித்து விளக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவத்திற்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சங்கத்தின் உப தலைவர், விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ, பிரசவ அறை சிகிச்சைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அடங்குவதால், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது வைத்தியர்கள் ஒருபோதும் அவசர சிகிச்சைகளில் இருந்து விலகிச் செல்வதில்லை என குறிப்பிட்டார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் ஒரு தரப்பினர் திட்டமிட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்த போதிலும், அது குறித்து தமக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான அறிவித்தல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், குறித்த வைத்தியர்கள் கடமை தவறியதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் தங்களது கடமை நேரத்திற்குப் புறம்பான நேரத்திலேயே தனியார் சேவையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு வைத்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கடமை நேரத்தில் கடமையைப் புறக்கணித்து தனியார் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் குறித்த வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர் ஒருவரும், சிரேஷ்ட விடுதி வைத்திய அதிகாரி ஒருவரும் அடங்குகின்றனர்.

பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக பிரசவ அறைக்கு வருமாறு அங்கிருந்த விடுதி வைத்திய அதிகாரியால் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் குறித்த இரு வைத்தியர்களும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர்கள் அரச கடமை நேரத்தில் தனியார் பிரிவில் பணியாற்றியதுடன், அந்த நேரத்தில் அரச வைத்தியசாலையில் கடமையில் இருந்ததாக கடமைப் பதிவேட்டில் (Duty Diary) பொய்யான தகவல்களைப் பதிவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற ஏப்ரல் 09ஆம் திகதி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாளாகும்.

மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதேச மட்டத் தலைவராவார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் முறையான ஒழுக்காற்று விசாரணையை சுகாதார அமைச்சு விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க