சற்றுமுன்னர் சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் புறப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக தவெக எம்.எல்.ஏ.வான கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு விழா தற்போது ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய்,ஆளுநர், முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் அலுவலக பணிகளை தொடங்கிய முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை பதவியேற்று 3 திட்டங்களில் கையெழுத்திட்ட முதலமைச்சர் அதனை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து பாதுகாப்புப்படைகள் சூழ அரசு வாகனத்தில் முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் தலைமை செயலகத்தில் அரியனையில் சற்றுமுன்னர் அமர்ந்துள்ளார்.
இதன்போது தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சருக்கு வீதிகளின் இருபக்கமும் மக்கள் சூழ்ந்து தனது வாழத்துக்களை தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து முதலமைச்சர் அரியனையில் அமர்ந்த விஜயை முக்கிய அதிகாரிகள் வரவேற்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன்கமைய நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.