சென்னை:
தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், தனது அடுத்தகட்டமாகச் சட்டசபை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முக்கியக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, 17-வது தமிழகச் சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக (Speaker Pro-tem) சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த கருப்பையா, கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு, திமுக-வின் சிட்டிங் எம்.எல்.ஏ வெங்கடேசனை வீழ்த்தி மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தற்காலிக சபாநாயகராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் விஜய் தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நாளை (மே 11) சட்டசபை கூடும் போது, தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் முதல்வர் விஜய் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து வரும் மே 13-ம் தேதிக்குள் விஜய் தனது பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபிக்க வேண்டும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னின்று நடத்தும் முக்கியப் பொறுப்பும் கருப்பையாவையே சேரும். இக்கட்டான அரசியல் சூழலில் ஒரு தலித் சமூகப் பிரதிநிதியை இந்த உயரிய பதவிக்கு விஜய் முன்னிறுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
#Karuppiah #SpeakerProtem #VijayAsCM #TVK #BreakingNews #May10 #TamilNaduPolitics #Sholavandan #DalitLeadership #AssemblySession #MajorityTest #ThalapathyVijay #NewGovernmentTN #TN_Assembly #StalinVsVijay #ElectionResults2026 #PoliticalUpdate #NewEraTN #VijayMakkalIyakkam #TamilNews_“`