தீவிபத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துகளஞ்சியத்திற்கு பெரும் சேதம்-தடையின்றி மருந்துகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன- மருத்துவமனை பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு மாற்றியமை மற்றும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து அவர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பணிப்பாளர், மருத்துவமனையின் உள்ளக மருந்துக் களஞ்சியத்திலிருந்தும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்தும் தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் அவர்கள் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். ‘பெரும் சேதத்தைத் தணிப்பதற்கு நீங்கள் எடுத்த இந்த வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது’ என அவர் தீயணைப்பு வீரர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
. மேலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் இணைந்து செயலாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஆளுநர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.
இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த தீயணைப்பு வீரர்கள், படையினர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகள் மருத்துவமனையால் முன்னெடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதன்போது ஆளுநருக்கு உறுதியளித்தார்.
dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்

rain-rules

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

768-512-26672389-thumbnail-16x9-shan

“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!

May 14, 2026

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த

687648807_1285529470437523_5068884044641172277_n4

“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக

1fb8d4e582643c30a07cba7b79d80a531778748271620113_original

“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

May 14, 2026

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்

ff4c6bd1bec4c8927e87c50e0deb633b_original

திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,

dmk-stalin

“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

May 14, 2026

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

image1-2026-05-14t131334-184-1778744675

“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

May 14, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது

nana

நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

put

சீரற்ற காலநிலை; புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

May 14, 2026

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

dd

திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026)

poi

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகத்திற்கு கள வியஜம் மேற்கொண்ட எம்.பி

May 14, 2026

ழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்(13) நாடாளுமன்ற