முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தை விரைவாக வழங்குமாறு வெகுசன ஊடக அமைச்சைக் கோரிய ரவிகரன் எம்.பி; விரைவாக வழங்கப்படுமென்கிறார் – பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன

முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவாக வழங்கப்படும் என கடந்த 08.04.2026அன்று வெகுசன ஊடக பிரதியமைச்சரால் தம்மிடம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுசன ஊடக அமைச்சு இந்தவிடயத்தில் விசேட கவனத்தைக் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் 07.05.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய சூழலில் முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2026.04.08 அன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னாருக்குரிய அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்கள் தொடர்பில் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மிகவும் விரைவாக மேற்படி வாகனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்கப்படுமென வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்னவால், 08.04.2026 அன்றைய நாள் மாலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய மன்னாருக்கு உடனடியாக குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவிற்கு வாகனம் வழங்கப்படுவதில் ஒரு மாத காலமாக தொடர்ந்தும் இன்றுவரை இழுபறிநிலை நீடித்துவருகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படுவதிலுள்ள இழுபறிநிலை தொடர்பாக 07.05.2026இன்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
அந்தவகையில் மாகாண அளவிலான அஞ்சல் சேவை வழங்கலில் முல்லைத்தீவு சமத்துவ நிலையில் இன்று வரை அணுகப்படவில்லை. அதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இதுவரை அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படாமை ஒரு சான்று என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வெகுசன ஊடக அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட வாகனம் திருத்த வேலைகள் நிறைவுசெய்யப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அறியமுடிவதாகவும் தெரிவித்தார்.
எனவே காலதாமதமின்றி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்குரிய அந்த வாகனத்தை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சரின் விசேட தலையீட்டை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரினார்.
இந்நிலையில் அஞ்சல் பரிவர்த்தனைக்கான வாகனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்களை புதிதாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அதற்கென வரவுசெலவுத்திட்டங்களல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி விடயத்தில் வெகுசன ஊடக பிரதி அமைச்சரின் விசேட தலையீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நன்றியைத் தெரிவித்ததுடன், கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அல்லது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அஞ்சல் பரிவர்த்தனையில் இன்னும் இழுபறி நிலை இருப்பதாக பிரதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
எனவே முன்னரே திட்டமிட்டதற்கு அமைவாக வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு மேற்படி பரிவர்த்தனை வாகனம் வரும் வகையில் பிரதி அமைச்சர் விசேட தலையீட்டோடு விரைவாக அதனை உறுதிப்படுத்தித் தருமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்குதல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் அலுவலகப் பதிலாளிகளின் நியமனந் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுசன ஊடக பிரதி அமைச்சருக்கு 07.05.2026இன்று கோரிக்கைக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ