இன்று மாலை காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறைக்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி காயமடைந்துள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற இருவரையும் தடுப்பதற்காக அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு கைதி காயமடைந்ததுடன், மற்றைய கைதி சிறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் இடது தோள்பட்டையில் காயமடைந்த கைதி, மேலதிக சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் காலி தேசிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்